MKJC Vaniyambadi

Staff Arena

09 Mar 2013 | Saturday By Meenkshi.P - Lecturer, Department of Tamilnadu

நேர நிர்வாகமும் திட்டமிடலும்

முன்னுரை :
'காலம் பொன் போன்றது' 
'காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது'
'கடந்த காலம் திரும்பவும் வாராது' 
போன்ற பழமொழிகள் காலத்தின் அருகாமையினைக் காலம் காலமாய் நமக்கு காட்டி வருகின்றது. பல ஆண்டு கணக்காகவும், பல யுகங்களாகவும் தவம் செய்து முனிவர்கள் இறைவனிடம் வரங்கள் பெற்றதாகப் பல புராணக்கதைகளை அறிந்திருப்போம். ஆனால் நாம் கேட்காமலே இறைவன் நமக்கு தினமும் 24 வரங்கள் தருகின்றார். அவைகள் தான் 24 மணி நேரங்கள். ஆனால் இவைகளை முழுமையாகப் பயன்படுத்தி கொண்டவரே இன்று புகழ்பெற்ற பெரியோர்களாகத் திகழ்கின்றனர்.

திட்டமிடலின் நோக்கம் :
நேரத்தை திட்டமிடுதல் என்பதே ஒரு கலைதான். நிலத்தில் பயிர் செய்து அறுவடை எதிர்பார்க்க ஆசைப்படும் ஒருவன், நேரடியாக விளைச்சலை மட்டும் பெற முடியுமா? அப்படி ஆசைப்பட்டால் ஏமாற்றமே மிஞ்சும் ! விளைச்சலை பெற விரும்புபவன், உழுதல், விதைத்தல், களை எடுத்தல், தண்ணீர் பாய்சுதல் முதலான பல படிகளை கடக்க வேண்டும். அதுபோல தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விரும்புபவர் நேரத்தை திட்டமிடுதல் மிகமிக அவசியமாகிறது.

ஒரு நாளின் பகுப்பு :
பொதுவாக 24 மணி நேரத்தை எட்டு, எட்டு மணி நேரமாக பிரிப்பர்
• உழைக்கும் நேரம்
• ஓய்வு நேரம்
• உறங்கும் நேரம்
இப்பகுப்பில், படிக்கும் மாணவர்கள் ஓய்வு நேரத்தைக் குறைத்துக் கொண்டு உழைக்கும் நேரத்தை அதிகப்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம். தேர்வுக்கு திட்டமிடுதலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்,
1. தேர்வுக்கு முன் திட்டமிடல்
2. தேர்வு எழுதுவதில் திட்டமிடல்


Archives

2013 (3)

March 2013 (3)

Read all...